Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்களுக்கு மாதம் ரூ.2500.. டில்லி அமைச்சரவை ஒப்புதல்…

டில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் பெண்களுக்கான செழிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் ரேகா குப்தா, “இன்று மகளிர் தினம். இன்று எங்கள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2500 வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த டெல்லி பட்ஜெட்டில் ரூ.5100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு விரைவில் தொடங்கும். இதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.

error: Content is protected !!