Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தன்னை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர்  பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி ஆகியோரின் நிராகரிப்பு மனுவை ஏற்ற நீதிமன்றம், சசிகலாவின் கோரிக்கையை  ஏற்கவில்லை.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம், இந்த வழக்கை பட்டியலிட்டு விசாரணை நடத்தவேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் 23ம் தேதிக்கு பட்டியலிடுவதாக தெரிவித்து உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!