Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்..

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் வரை அவரை , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரித்து பேசி வந்தார். ஆனால் விஜய் கட்சியின் கொள்கையை அறிவித்த பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சிக்குள்ளும் தொடர்ந்து பிரச்னைகள் எழ ஆரம்பித்துள்ளன. பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இச்சூழ்நிலையில், நடிகர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சீமான் நேற்றிரவு சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது என்ன ஆலோசிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அரசியல் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த நவம்பர் 2ஆம் தேதியே ரஜினியை சந்திக்க சீமான் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த சந்திப்பு தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!