Skip to content
Home » மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

  • by Senthil

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1991-96ல்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழ்நாடு முழுவதும் சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ரூ. 23 லட்சம் முறைகேடு செய்ததாக  சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை  கோர்ட்  செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறைதண்டனை வழங்கியது.

அப்போது செல்வகணபதி திமுகவில் இணைந்து , எம்.பியாக இருந்தார். சிறைத்தண்டனை கிடைத்ததால்,  அவர் எம்.பி. பதவியையும் இழந்தார். மீண்டும் தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது, தீர்ப்பில் 2 ஆண்டு சிறைதண்டனை ரத்து செய்யப்பட்டது. எனவே இனி செல்வகணபதி தேர்தலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!