Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் எஸ்பியாக செல்வகுமார் பொறுப்பேற்பு….

அரியலூர் எஸ்பியாக செல்வகுமார் பொறுப்பேற்பு....

அரியலூர் மாவட்டத்தின் 16-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சு.செல்வகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் கூறுகையில்,

அரியலூர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.
போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனைகள், தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பான, அமைதியான, குற்றமற்ற அரியலூர் மாவட்டத்தை உருவாக்க காவல்துறை முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று கூறினார்.

error: Content is protected !!