Skip to content
Home » செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

  • by Senthil

நமது மாநிலம் முழுவதும் விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கும் விளையாட்டு வளாகத்திற்கு வீராங்கனைகளுடன் இணைந்து இன்று அடிக்கல் நாட்டினோம்.

இந்த வளாகம் பயன்பாட்டிற்கு வரும்போது, செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும் பேருதவியாய் அமையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

அதேபோல்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் x தளத்தில்  , தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,600 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பில்  “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தைImage

Image

Image

Image

விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் செயல்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டுகளுக்கான உபகரணங்களை வழங்கும் வகையில் 335 Sports Kits-ஐ செங்கல்பட்டில் இன்று வழங்கினோம்.

இந்த உபகரணங்கள் மூலம் பயிற்சிகள் மேற்கொண்டு விளையாட்டுத்துறையில், சாதனைகள்  படைக்க நம் வீரர்கள் – வீராங்கனைகளை வாழ்த்தினோம்.   என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், கல்வி – மருத்துவம் போல, விளையாட்டுத்துறைச் சார்ந்த வசதிகளும் கிராமங்கள் வரை சென்றடைய வேண்டும் என்று கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க,  கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், கலைஞர் அவர்களுடைய பெயரில் தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகள்தோறும்  ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 359 கிராம ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டு உபகரணங்களுக்கான 449 Sports Kits-ஐ இன்று வழங்கினோம்.

கலைஞர் விளையாட்டு உபகரணங்களை பெற்ற கிராம ஊராட்சிகளுக்கு அவற்றை கொண்டு சேர்ப்பதற்கான வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!