தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார்.
சம்பவத்தன்று போலீஸ்காரர் மனோகுமார், ஊருக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு ஒரு வீட்டில் இளம்பெண் குளித்துக்கொண்டிருந்தார். இதை கவனித்த போலீஸ்காரர் பெண் குளிப்பதை எட்டிப்பார்த்து உள்ளார்.
திடீரென அந்த பெண் குளித்துக்கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவரை கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதனால் அந்த பெண் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் மனோகுமார் எஸ்கேப் ஆகிவிட்டார்.
இது குறித்து அந்த பெண் குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மனோகுமாரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
h