Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதி வணிக வளாகங்கள் , மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் பகுதியாகும். மேலும் திருமண மண்டபங்கள், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகிறது. திருவாரூர்,மன்னார்குடி , பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் போன்ற முக்கிய தலங்களுக்கு செல்லும் வழித்தடமாக இப்பகுதி உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 100 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மது வாங்கிக்கொண்டு அருகில் உள்ள திறந்தவெளியில் மத குடித்து விட்டு பொதுமக்கள்,பெண்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடிபோதையில் மது பிரியர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வணிகக் கடைகள் முன்பு மது பாட்டில் கலை உடைத்து செல்கின்றனர்..

பள்ளிக்கு அருகில் நூறு மீட்டர் தொலைவில் உள்ள இந்த மது கடை செயல்படுவது அரசின் சட்ட விதிகளுக்கு புறம்பானது. பல்வேறு விதத்திலும் மிகுந்த அவதிக்கு அனைத்து தரப்பினரும் உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை உடன் அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார், தொல்காப்பியர் சதுக்க வட்டார தலைவர் ரமேஷ், செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விதிகளுக்கு புறம்பாக செயல்படும் பட்டாஸ்மாக் கடையை உடன் அப்புறப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வணிகர் சங்க நிர்வாகிகள் தேசிகன், சங்கர், கவுன்சிலர் செந்தில், முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், வார்டு செயலாளர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!