Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு…. வீடியோ…

திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடுமையான பனிப்பொழிவு நிலவியது. அதிகாலை முதல்  காலை 9 மணி வரை பனிமூட்டம் கடுமையாக இருந்தது. குளிரும் வாட்டி எடுத்தது. இதன் காரணமாக காலையில்  மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே நேரத்தில் வாகனங்களில்

சென்றவர்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.  டூவீலர்களில் சென்றவர்கள் காலை 9 மணி வரை சொட்டர் அணிந்து  இருந்தனர்.   திருச்சி புறநகர் பகுதிகளில் முசிறி முதல்  திருச்சி பைபாஸ் வரை காலை 8 மணி வரை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இது குறித்து வாத்தலை பகுதி விவசாயிகள் கூறும்போது  இந்த பகுதியில் இப்போது மலர் சாகுபடி செய்துள்ளோம். கடுமையான பனி தொடர்ந்து நீடித்தால் மலர்கள் பூக்கும் தன்மை பாதிக்கப்படும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!