Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார் (22) . இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கே.டி.எம்., பைக் வேண்டும் எனவும், அதற்காக 1.5 லட்சம் ரூபாய பணம் வேண்டும் என தந்தையிடம், நந்தகுமாார் கேட்டுள்ளார். ஆனால், இவ்வளவு விலை கொடுத்து பைக் வாங்க முடியாது. அப்புறம் வாங்கி தருகிறேன் என நந்தகுமாரிடம், கோவிந்தராஜ் கூறியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த நந்தகுமார், கடந்த டிச. 29ம் தேதி, கல்லணை கால்வாய் நடைபாதையில் எலி பேஸ்ட்டை மில்க்சேக்கில் கலந்து குடிப்பதை, செல்பி வீடியோவாக பதிவு செய்து, நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நண்பர்கள் சிலர், கல்லணை கால்வாய் பகுதிக்கு வந்து, மயக்க நிலையில் இருந்த நந்தகுமாரை மீட்டு, மருத்துவகல்லுாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!