கரூர் ஆண்டான்கோவில் பகுதியில் மாவட்ட எஸ்.பி., வீடுகள் தோறும் நேரில் சென்று காவல் உதவி தொடர்பு எண் கொடுத்து விழிப்புணர்வு, உங்களுக்கு உதவ எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்ற விழிப்புணர்வு வாசகங்களை வழங்கினார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டான்கோவில், என்.எஸ்.கே நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, காவலர்களுன் இன்று தெருவில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் வீடுகள் தோறும் நேரில் சென்று வீட்டில் உள்ளவர்களிடம், பகல், இரவு நேரங்களில் சந்தேகப்படும் நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் வந்து உதவி கேட்பது

போல் வந்தாலோ உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து புகார் அளிக்கலாம்.
மேலும் தனியாக இருக்கும் முதியோர்களிடம் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, எஸ்.பி., டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலைய தொலைபேசி எண்ணை கொடுத்தும், விழிப்புணர்வு நோட்டிஸ் ஒட்டியும் உடனடியாக எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் உடனடியாக நேரில் வந்து நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.
மேலும் வெளியூர் செல்லும் போது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்லுங்கள் என தொலைபேசி எண்ணை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
