Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடக்கிறது. இதில்  கார்த்திகை மாதம் வளர்பிறையில்  வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசியாக  கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த கைசிக ஏகாதசி விழா ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதற்காக கோயிலின் உள் பகுதியில் மின் விளக்கு   செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக கிளி‌ மண்டபம் மற்றும் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் மின் விளக்குகள், சீரியல் செட்கள் போடப்பட்டுள்ளது.
இதற்கான காண்டிராக்ட்  திருச்சி பால்பண்ணை பகுதியில் செயல்பட்டு வரும் S .P. M  என்ற நிறுவனத்துக்கு  வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த s.p.m நிறுவனம்  இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி  இந்து  அல்லாதோருக்கு கடைகளோ, குத்தகை நிலங்களை அல்லது திருக்கோவிலுக்குள் பணி செய்ய உரிமம் கோர முடியாது என்ற விதி இருக்கும்போது மாற்று மதத்தினருக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் மின்விளக்கு அலங்காரம் செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது என இந்து  அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன.

மாற்று மதத்தினர் திருக்கோலிலுக்குள் வரக்கூடாது என்று சட்டம் உள்ளது, அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட இடம் வரையிலே தான் அனுமதி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆரியப்படாள் வாசல்  வரையில்  தான் மாற்று மதத்தினரை அனுமதிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. செல்ல ஆனால் திருக்கோவிலின் கொடி மரம் தாண்டி பிரதான இடமான கிளி மண்டபத்திற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.. காண்டிராக்ட் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!