Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் டாஸ்மாக் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

கரூரில் டாஸ்மாக் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிப் புறக்கணிப்பு போராட்டம்.

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 74 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனிடையே, இன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, டாஸ்மாக் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மதுபானம் பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

மேலும் மின்கட்டணம், பாட்டில் வாங்கும் ஊழியர் சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் இந்த கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!