Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

இந்தியா முழுவதும் இன்றைய பண்டிகை காலங்கள் மது இல்லாமல் கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மதுபானக்கடைகளை அரசே நடத்தி வருகிறது. இதனால், ஆண்டு தோறும் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து விற்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு விற்பனை கூடிக்கொண்டே செல்கிறது. அவ்வப்போது சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வாடிக்கை. அதன்படி இந்த ஜனவரி மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் முத்துசாமி
பொங்கல் பண்டிகையின் போது திருவள்ளுவர் தினமான 16ம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதியும், குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொங்கல் பண்டிகையின் போது டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் முத்துசாமி
மேலும், டாஸ்மாக்கில் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை எனவும் மது குடிப்பவர்கள் வேறு எங்கும் போகக்கூடாது என்பதை மட்டும் கண்காணித்து வருவதாகவும் கூறினார். இதேபோல், மதுபானங்களை டெட்ரா பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!