Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இக்கடையின் விற்பனையாளர் சிவகுமார் நேற்று இரவு கடையை வழக்கம் போல பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவு கடையின் பூட்டை‌ உடைத்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புடைய மதுபானங்கள் அடங்கிய பெட்டிகளை தூக்கி சென்று சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கருவேல மரம்‌ அருகே வைத்துவிட்டு மதுபான கடையின் அருகே உள்ள பாரில் காலி

மதுபாட்டில்களை கட்டி வைத்திருந்த சாக்கு பையை எடுத்து திருடிய மதுபாட்டில்களை சாக்கு பையில் போட்டு திருடி சென்றுள்ளனர். இதில் மலிவு விலை மற்றும் விலை அதிகமான மதுபானங்கள் என அனைத்து விலைகளிலும் கலந்து திருடி‌சென்றுள்ளனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் டாஸ்மாக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்திவிட்டு மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!