Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் காட்டுத் தோட்டம் கார்மல் நகரை சேர்ந்தவர் நாராயணன் (49). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயா. இவர்களின் மகள் ப்ரீத்தி (19). தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி. கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் ஜெயாவும், ப்ரீத்தியும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது ப்ரீத்தி பக்கத்து வீட்டுக்கு சென்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை ஜெயா கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ப்ரீத்தி தன் ரூமிற்கு சென்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ப்ரீத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!