Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

தஞ்சை விளார் ரோடு அன்பு நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் ரகுபதி (24). மெக்கானிக். இவர் நேற்றுமுன்தினம் இரவு ரகுபதி தன் பைக்கில் வேலை விஷயமாக ஒரத்தநாட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சை மருங்குளம் புதுப்பட்டி கட் ரோட்டில் வந்தபோது ஒரத்தநாடு நோக்கி வந்த காரும், ரகுபதியின் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ரகுபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!