Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், நகர உட்கோட்டம், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 30.06.2023-ம் தேதி மானோஜிப்பட்டியில் வசிக்கும் ஜீவா என்பவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் பாட்டி மல்லிகா தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்த காவல் ஆய்வாளர் ரவிமதி, வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிபட்டியைச் சேர்ந்த ஜீவா (24) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் சாட்சிகளை விசாரணை செய்த தஞ்சாவூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி, குற்றவாளியான ஜீவாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரு.15,000 அபராதம் விதித்தும், அத்தொகையை கட்டத்தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக அரசிடமிருந்து ரு.6,00,000 நிவாரணத் தொகையாக பெற்று தருமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்றக் காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் வெகுவாக பாராட்டினார்.
error: Content is protected !!