Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை சுற்றுலா மையத்தை இன்று காலையில் சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு முதல் தரங்கம்பாடி தாலுகாவில் விடாமல் கனமழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா மையமான டேனிஷ் கோட்டையை சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொள்ள வந்தனர். காரில் இருந்து இறங்க முடியாத அளவிற்கு கனமழை கொட்டினாலும் குடை பிடித்தபடி அடை மழையிலும் விடாது ஆய்வு செய்தனர். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் சுற்றுலா வளர்ச்சி பணிகள் வளர்ச்சி நிலைகள் குறித்து சுற்றுலாத்துறை ஆணையர் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் கோட்டாட்சியர் காப்பாச்சியர் வட்டாட்சியர் வருவாய்த் துறையினர் என பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!