Skip to content
Home » தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் 27 வது ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத் சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய 5 பேரை தனிப்படை அமைத்து மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தேடிவந்த நிலையில் திருக்கடையூர் விஜயகுமார், தருமபுர ஆதீனத்துடன் தற்போது வரை உள்ள செந்தில் ஆகிய இருவரும் எந்த தவறும் செய்யவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த கடிதம் வெளியான நிலையில் திருக்கடையூர் விஜயகுமாருக்கு மட்டுமே தான் கடிதம் அளித்ததாகவும் திருக்கடையூர் விஜயகுமார் ஆதீனமடத்திற்கு உதவி செய்ததாகவும் தவறுதலாக அவர் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வழக்கில் இருந்து திருக்கடையூர் விஜயகுமாரை விருத்தகிரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குற்றவாளிகளை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் முப்பையில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் 8பேர் அடங்கிய குழுவினர் மகாராஸ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததனர். தொடர்ந்து அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறைக்கு பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை அழைத்து வருகின்றனர். நாளை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!