Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறையை களிக்க கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். சிறுவனை காணாமல் உடன் இருந்த சிறுவர்கள் தேடிபார்த்துள்ளனர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை சடலமாக மீட்டனர். இறந்த சிறுவன் உக்கடம் பகுதியை சேர்ந்த  மணிகண்டன் (14) என்பது தெரியவந்தது. இது குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!