தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது
இரா. முத்தரசன் பேட்டி
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன்
தமிழகத்தில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் தொடர்ந்து எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகள், தேர்தல் ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெறுமா என்கிற அச்சத்தையும், கவலையையும் உருவாக்கி இருக்கிறது.
ஆனால் அந்த அமைப்பு இன்றைக்கு ஒட்டுமொத்தமாக மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் ன் கைப்பாவையாக மாறிவிட்டது என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
மோடியின் உத்தரவை செயல்படுத்தக்கூடிய அமைப்பாக மாறிப்போய்விட்டது. அரசியலமைப்பு சட்டப்படி செயல்படக்கூடிய அமைப்பாக இல்லாமல், ஒரு சுதந்திர சுயாட்சி அமைப்பாக இல்லாமல், மோடி, அமித்ஷா என்ன உத்தரவிடுகின்றனரோ, அதை அடிபணிந்து, ஏற்று, நிறைவேற்றுகிற ஒரு அடிமை அமைப்பாக மாறி இருப்பது என்பது நாட்டினுடைய ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதியாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசுகிறார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறப்போவதில்லை என்பதால், ஆவேசப்பட்டு சாபமிடுகிற நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். பாஜக வலையில் சிக்கியுள்ள அவர் தப்ப முடியாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார் முத்தரசன்.
