Skip to content
Home » தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த பாவட்டக்குடி ராமையன் மகன் பிரகதீஸ்வரன் (14). நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரகதீஸ்வரன் கடந்த மாதம் 21 ஆம் தேதி பள்ளியில் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, பள்ளியில் உதவி தலைமை ஆசிரியரான ராதாகிருஷ்ணன் என்பவர் மாணவர்கள் தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி, மாணவன் பிரகதீஸ்வரனை அழைத்து பிவிசி பைப்பால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு கை, கால், தோள்பட்டை மற்றும் காது ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவன் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். தலைமை ஆசிரியரும் மாணவனின் பேச்சை கேட்காமல், உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பேசி பிரகதீஸ்வரனை தாக்கியுள்ளார்.

பாவட்டகுடியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை அளித்தபிறகு பள்ளிக்கூடத்திற்கு சென்று தலைமை ஆசிரிடம் பெற்றோர் தகராறு செய்தனர். மன்னிப்பு கேட்ட தலைமை ஆசிரியர் உடனடியாக உதவித் தலைமை ஆசிரியரை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார்.

கடந்த 5-ம் தேதி மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவன் பிரகதீஸ்வரனை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவனின் ஒரு காது செவித்திறனை இழந்துவிட்டது. உடனடியாக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் சி.டி. ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர். கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!