Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை  காணிக்கையாக வழங்குவதாக  16 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்து இருந்தார்.

இதனை நிறைவேற்றுவதற்காக போஸ் – மல்லிகா தனது குடும்பத்தினருடன் நேற்று  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து  மூலவருக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள  978 கிராம் எடை கொண்ட தங்க காசு மாலையை நேர்த்திகடனாக வழங்கினர். கோயில் இணை ஆணையர் கார்த்திக் காணிக்கை பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!