Skip to content
Home » கச்சத்தீவு நாடகத்தை விட்டு, சீனா கைப்பற்றிய நிலத்தை மீட்க பாருங்கள்….. திருமாவளவன் பேட்டி

கச்சத்தீவு நாடகத்தை விட்டு, சீனா கைப்பற்றிய நிலத்தை மீட்க பாருங்கள்….. திருமாவளவன் பேட்டி

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று அரியலூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில்  தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

அரியலூர் அருகே உள்ள வாலாஜா நகரம் கிராமத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாரதிய ஜனதா அரசு மக்களிடையே மத உணர்வுகளை தூண்டிவிடுவதில் செலுத்தும் கவனத்தை விட நாட்டு நலனில் கூடுதலாக கவனம் செலுத்தவில்லை .ஒருபுறம் பாகிஸ்தான் மறுபுறம் சீனா நமது தேசத்தை ஆக்கிரமித்து வருகிறது.

நாட்டை அச்சுறுத்துபவர்களை எதிர்க்க  திராணியற்ற வராக தான் மோடி அவர்கள் பத்தாண்டு காலத்தை கடத்தியுள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தில் நமக்கு சொந்தமான பகுதிகள் நதிகளை தங்கள் தேசத்திற்கு உட்பட்ட பகுதிகள் என சீனா அரசு அறிவித்து பெயரும் சூட்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.வேதனை அளிக்கிறது அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் காங்கிரஸ் இல்லாத பாரதத்தை கட்டமைப்போம். கழகங்கள்

இல்லாத தமிழகத்தை கைப்பற்றுவோம் என பாரதிய ஜனதா கட்சியினர் தம்முடைய அரசியல் ஆதாயத்திற்கான அரசியலை மட்டுமே செய்து வருகின்றனர்.

மக்கள் இவர்களை உணர தொடங்கி விட்டார்கள் .பெரும்பான்மையான இந்து சமூகத்தினர் பாரதிய ஜனதா கட்சி இந்துக்களுக்கு விரோதமான கட்சியாக உள்ளது என உணர ஆரம்பித்து விட்டார்கள். கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பறிப்பதற்காக அவர்கள் நடத்துகிற நாடகம். இதனை கைவிட்டு சீன அரசால் ஆக்கிரமித்து உள்ள இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தற்பொழுது உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கருத்து கேட்டுள்ளது அதில் வாக்கு பதிவு இயந்திரத்துடன் 100% யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியை இணைக்க வேண்டும் அந்த ஒப்புகை சீட்டை வாக்கு எண்ணிக்கையின் போது எண்ண வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்டிருப்பது ஆறுதலளிக்கிறது .

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!