Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பல் டாக்டர்..பல்லை சுத்தியால் பிடிங்கியதாக புகார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியில் சேர்ந்த சமியுல்லா திருப்பத்தூர் நகர் பகுதியில் இன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பல் மருத்துவர் தண்டபாணி மீது திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில் கடந்த 21ஆம் தேதி பல்வலியின் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பல் மருத்துவர் தண்டபாணியிடம் தனது பல்லை காண்பித்தேன். அவர் பல்லைப் பிடுங்க வேண்டும் எனக்கூறி காட்டுமிராண்டித்தனமாக பல்லை சுத்தியால் அடித்து பிடிங்கினார்.

அப்போது என்னுடைய தாடை உடைந்து விட்டது நான் வலியால் துடித்தேன் திரும்பவும் அடுத்த நாள் வந்து பார்த்தபோது உடைந்த தாடைகளுக்கு

கம்பிகளை வைத்து கட்டினார். அதன் பிறகு என்னால் சரிவர சுவாசிக்க முடியவில்லை மேலும் உணவுகள் ஏதும் சாப்பிடாமல் நீர் ஆதாரங்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன் எனவே தனது தாடையை உடைத்த பல் மருத்துவர் தண்டபாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

error: Content is protected !!