Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாநில பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாகவும், தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

எனவே இந்த கூட்டத்தில்  அண்ணாமலை கோஷ்டிக்கும், எதிர்கோஷ்டிக்கும்  மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில்  இந்த கூட்டத்தில் அது எதிரொலிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!