Skip to content
Home » மாநில மகளிர் கொள்கை…… தமிழக அமைச்சரவை ஒப்புதல்

மாநில மகளிர் கொள்கை…… தமிழக அமைச்சரவை ஒப்புதல்

  • by Senthil

தமிழக அமைச்சரவை  கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை கோட்டையில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது.  அமைச்சர் மதிவேந்தன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். தலைமைச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை முதன்மை செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்படும் என்பது உள்பட பல திட்டங்கள் இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளது.   அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது, கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்டுகிறதுவரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்.  வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில விவாதிக்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!