திருச்சி, கருமண்டபம் அசோக் நகர் மளிகை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (28) இவரது நண்பர் ஹேமேஸ்வரன் (22) சம்பவத்தன்று இருவரும் தனது நண்பர்களுடன் கருமண்டபம் கோணக்கரை பகுதியில் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது ஹேமேஸ்வரன் ஏழுமலை மனைவியை பற்றி தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஹேமேஸ்வரன், ஏழுமலை இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் ஹேமேஸ்வரன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து ஏழுமலையை சரமாரியாக தாக்கி விட்டு ஓடி விட்டனர். இது குறித்து ஏழுமலை கன்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ஹேமேஸ்வரன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.