Skip to content
Home » திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Senthil

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு 8,100 தருவதாக கூறிவிட்டு 3000 கொடுப்பது நியாயமா,

மற்றவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் தாங்கள் 140 கோடி மக்கள் தொகையில் 90 கோடி இந்து விவசாயிகளுக்கு மட்டும் எந்த உதவி செய்யாமல் இருப்பது நியாயமா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது பெருமைக்குரியதுதான் அதை கும்பிடும் என்று விவசாயிகள் 90 கோடி பேர்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் வஞ்சிப்பது நியாயமா, மோடி ஐயா விவசாயிகள் ஓட்டு தங்கள் கட்சிக்கு வேண்டாமா அல்லது ஓட்டு இயந்திரத்தை மாற்றி ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற எண்ணம் என கூறி தேசிய தென்னிந்திய நதிகள்

இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சிக்னலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் திடீரென விவசாயிகள் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அங்கு விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நீண்ட நேரமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தையும் அவர்கள் களையாமல் இருப்பதால் இன்னும் சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் தேசிய தென்னிந்திய விவசாய சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!