Skip to content
Home » திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சத்யா (35). இவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை பட்டா கடந்த 22.8.2023 அன்று திருச்சி மாவட்ட கலெக்டரால் 138 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா பெற முடியாத காரணத்தால் சத்தியா மறுநாள் 23.8.23 அன்று விஏஓ அலுவலகம் சென்று அங்கிருந்த விஏஓ சுமதி என்பவரிடம் தனது வீட்டு மனை பட்டா கொடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு விஏஓ சுமதி (34) 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வீட்டுமனை பட்டா வழங்க முடியும் என்று கூறியுள்ளார். இறுதியாக 7 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே வீட்டுமனை பட்டாவை வழங்க முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சத்தியா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் சத்தியா இன்று (30ம் தேதி) மாராடி வீஏஓ அலுவலகத்தில் விஏஓ சுமதியிடம் 7 ஆயிரம் லஞ்சம் தரும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக விஏஓ சுமதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!