Skip to content
Home » திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.  கூட்டம்  தொடங்கியதும்  நி்திக்குழு தலைவர்  முத்துசெல்வம்,  பட்ஜெட் அறிக்கையை மேயர்,  கமிஷனரிடம்  வழங்கினார். அதைத்தொடர்ந்து  நிதிக்குழு தலைவர் முத்துசெல்வம்  வரும்2024-25ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலைய த்தில்  குளுகுளு வசதி அமைக்கும் பணியினை இயக்குதல் மற்றும் பராமரித்தால் பற்றாக்குறை  நி்ரப்பு நிதி 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற் கொள்ள  நிர்வாக  நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

பஞ்சப்பூரில்  ஒ ருங்கிணைந்த  சந்தை கட்டும்  பணி ரூ.161 கோடியே 70 லட்சம்  மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு  கட்டிடம் கட்டும் பணி  ரூ.41 கோடியில் மேற்கொள்ளப்படும்.

• ஒவ்வொரு வார்டிற்கும் சுமார் ரூ.40 லட்சம் சாலைப்பணிகளுக்கெனவும் மற்றும் ரூ.50 லட்சம் மழைநீர் வடிகால் அமைப்பதற்கெனவும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
•               தெருவோர வியாபாரிகளுக்கான ஆய்வு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் கமிட்டி அமைப்பதற்கும், தேர்தல் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி மூலம் தெருவோர வியாபாரிகள், வியாபாரம் நடத்துவதற்கு உரிய பகுதிகளை கண்டறிவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக யானைக்குளம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், அப்பகுதியில் செயல்படும் பர்மா பஜார் வியாபாரிகளுக்கென Street Vending Zone அமைத்து,  வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், வழிவகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
• மேலரண் சாலையில் பன்னடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, மேலரண்சாலை “வாகனங்கள் நிறுத்தக் கூடாத மண்டலம்” (No parking zone) என அறிவிக்கப்படும்.
•ஐந்து வார்டு அலுவலகங்களிலும் இடவசதிக்கேற்ப Food Street அமைப்புகள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
• மாநகராட்சிப் பள்ளிகளில் இட வசதிக்கேற்ப எல்கேஜி, யுகேஜி வகுப்பிற்கென தனி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதிக்கும் அறையில், விடுபட்ட மருத்துவமனைகளில் குளிர்சாதன வசதிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.140 கோடி மதிப்பீட்டில்,  சுமார் 250 கி.மீ நீளத்திற்கு  BT / CC / paver block சாலைகள் (End to End roads) அமைக்கப்படும்.

 

திருச்சி மாநகராட்சியின் மொத்த வருவாய் — ஆயிரத்து23 கோடியே  15 லட்சத்து  13 ஆயிரம் ரூபாய்.

மொத்த செலவு —ஆயிரத்து 22 கோடிேய 41 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்.   உபரி  வருமானம் 73லட்சத்து  30 ஆயிரம் ரூபாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!