Skip to content
Home » திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்… கொலையாளிகள் கைது..

திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்… கொலையாளிகள் கைது..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பெருமாள் மலைப் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி இவருக்கு ஒரு பெண் உள்பட மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன இவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார் கடந்த 20 .9. 2023 அன்று இவரது மூன்றாவது மகனான விஜய் என்பவரை அப்பகுதியில் பார் நடத்தி வரும் வினோத் என்பவர் அழைப்பதாக இவரது கடைசி மகன் சீனிவாசன் போனில் கூறியுள்ளார். இதனால் இரவு 10:30 மணி அளவில் வீட்டை விட்டு சென்ற விஜய் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது இதனைத் தொடர்ந்து விஜயை பல இடங்களில் அவரது பெற்றோர்கள் தேடி உள்ளனர் இந்த நிலையில் பச்சை மலை கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட தாளுர் பகுதியில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக துறையூர் வட்டாட்சியர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அடிவாரம் பகுதியில் டாஸ்மார்க் பார் வைத்து நடத்தி வரும் வினோத் மற்றும் கீரம்பூர் காலனி பகுதியை சேர்ந்த ராஜாத்தி என்பவரின் மகன் நந்தா என்ற இருவரும் அடிவாரம் பகுதியில் சுப்ர மணியனின் மகன் விஜயை தாங்கள் கொன்றதாக துறையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அடிவாரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் அவரை அடித்து கொன்று சடலத்தை இருசக்கர வாகனத்தில் பச்சை மலையில் உள்ள தாளுர் பகுதியில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் புதைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் அவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர் கொலை செய்ததற்கான காரணத்தை சரணடைந்தவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட விஜயின் தந்தை சுப்பிரமணியன் கூறுகையில் பச்சைமலை பகுதியானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மாலை 6 மணிக்கு மேல் மலைவாழ் மக்களை தவிர யாரும் மலை மீது செல்வதற்கு அனுமதி கிடையாது என்று இருக்கும் பொழுது இரவு 11 மணி அளவில் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வனத்துறையின் செக் போஸ்ட்டை தாண்டி இருசக்கர வாகனத்தில் சடலத்தை மலை மீது கொண்டு சென்றது எப்படி? வனத்துறையின் பாதுகாப்பை மீறி எவ்வாறு கடந்து இருப்பார்கள் என்று இறந்தவரின் தந்தை சுப்பிரமணி கேள்வி எழுப்பி உள்ளார்? இது வனத்துறையின் அலட்சியமா அல்லது அவர்களின் கவனக்குறைவா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்Iபி உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!