Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் மினி மாரத்தான் போட்டி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு படைகளும் தொழிற்சாலைகளில் ஒன்றாகும் இந்நிலையில் நாடு முழுவதும் இன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் நடந்த மினி மராத்தான் போட்டியை துப்பாக்கி தொழிற்சாலை மேலாண்மை இயக்குனர் சைரேஷ்குமார் கொடி அசைத்து

தொடங்கி வைத்தார். மேலும் மராத்தான் போட்டியிலும் கலந்து கொண்டார். துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசும், சிறுவர் சிறுமிகள் 10 பேருக்கு ஆறுதல் பரிசு மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசு என சைரேஷ்குமார் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!