Skip to content
Home » திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லை குடி ஊராட்சி வளன் நகரில் பஞ்சாயத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறை உள்ளது. இந்த அறை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து உள்ளது இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த அருள் ஜோசப் (41) என்பவர் டாக்டர் அம்பேத்கார் இளைஞர் மன்றம் என்ற பெயரில் அதில் வைத்து பொதுமக்களுக்கு சேவை செய்து வந்ததாகவும்

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் கீழ முல்லைக்கொடி ஊராட்சி கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அரை இருக்கும் இடம் தனது சொந்தமான இடம் எனக்கூறி கடந்த மாதம் 9ம் தேதி இயந்திரத்தின் மூலம் இடித்தப்போது இதனை கேட்ட டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்களை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் .

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி கீழமுல்லைக்குடியை சேர்ந்த ஏசுதாஸ், ஜார்ஜ், ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா, கிராம நிர்வாக அலுவலர் ரவி, நில அளவையர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சண்முக வடிவேல், கீழமுல்லைக்குடியை சேர்ந்த அருள் மோனா மற்றும் இரண்டு பேர் அந்த இடத்தை அளந்ததாகவும் அப்போது தடுக்க வந்த சங்க உறுப்பினரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இந்த நிலையில் சரவணன் இடம் எதற்காக அளக்க வந்தது குறித்து முறையான அறிவிப்பு தரவில்லை என கேட்டதற்கு அதெல்லாம் கொடுக்க முடியாது சட்டம் எல்லாம் பேசாதே எனக் கூறியதாகவும் இந்த நிலையில் ரவி சண்முக வடிவேலிடம் அந்த கட்டிடத்தை இடித்து விடுங்கள் என கூறி உள்ளார் சண்முகவடிவேலிடம் அந்த கட்டிடத்தை இடிப்பதற்கு உங்களது என்ன அதிகாரம் இருக்கிறது

அருள்ஜோசப் என கேட்டதற்கு அப்படித்தான் இடிப்பேன் என திட்டியதோடு அருகில் கடந்த சம்மட்டியால் அடிக்க வந்ததாகவும் பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அருள் ஜோசப் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!