Skip to content
Home » திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் கடந்த 2011 ஆம் ஆண்டு தாலுக்கா அந்தஸ்து பெற்றது. இந்த நிலையில் திருவெறும்பூறுக்கு என தனியாக தீயணைப்பு நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதனால் திருவெறும்பூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என திருவெறும்பூர் பகுதியில் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் 1.81 கோடி மதிப்பீட்டில் திருவெறும்பூரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை திருவெறும்பூர் பழைய ஒன்றிய வளாகத்திற்குள் புதிய தீயணைப்பு

நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார்

இந்த விழாவில் மத்திய மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் குமார், மாவட்ட அலுவலர் ஜெகதீசன், உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், சத்தியவர்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர்   மகேஸ் ழி கலந்து கொண்டு புதிய தீயணைப்பு நிலையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது… தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 33 மாதங்கள் ஆகிறது தமிழக முதல்வர் 33 மாதம் தமிழக முன்னேற்ற மாதம் என்ற கூறுவார் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் ஒரு பகுதியாக இந்த தீயணைப்பு

துறை உள்ளது சட்டமன்றத்தில் தீயணைப்பு நிலையம் திருவெறும்பூர் பகுதியில் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் பேசிய பொழுது தான் திருவெறும்பூர் பெயர் சட்டமன்றத்தில் ஒலித்தது. இது திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதிகளின் மையப் பகுதியாக உள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு நான் முதன் முதலில்
சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அரியமங்கலம் குப்பை கிடங்கு பேய் விபத்து நிகழும் போது தீ விபத்தை அணைப்பதற்காக வீரர்கள் தங்களது உயிரை துச்சம என மதித்து செயல்படுகின்றனர்.

அவர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்றார். இந்த விழாவில் திருச்சி ஆர் டி ஓ பார்த்தீபன், மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள்
கே எஸ் எம் கருணாநிதி திருவெறும்பூர் பகுதி செயலாளர் கூத்தைப் பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!