திருச்சி தமிழ் சங்க மன்றத்தில் இன்று விருக்ஷா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் Tiny kids மழலையர் பள்ளி குழந்தைகள் ஐஸ் பார் மீது நான்கு குழந்தைகள் பத்து நிமிடம் பத்மாசனம் மற்றும் தடாசனம் செய்தனர். முட்டை மீது ஆறு குழந்தைகள் யோகா பத்து நிமிடம் செய்து உலக சாதனை படைத்தனர். இந்த
சாதனை நிகழ்வினை சித்ரா வினோத் ஏற்பாடு செய்திருந்தார். இந்த சாதனை விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. குழந்தைகளின் இந்த ஆசன நிகழ்வு காண்போரை வியக்க வைத்தது.