Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மருந்துக்கடை பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி… பதபதைக்கும் வீடியோ..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மெடிக்கல் ஷாப்பில் பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மருந்து வாங்குவது போல் ஒரு இளைஞர் வந்துள்ளார் அப்போது பெண் மருந்து எடுத்துவிட்டு திரும்பி வந்த பொழுது அந்த இளைஞர் கழுத்தில்

இருந்த நகையை படிக்க முற்பட்டபோது அந்த பெண் கீழே விழுந்துள்ளார். இதனால் இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தற்போது காந்திகிராமம் பகுதியில் பெண்ணிடம் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்த இளைஞரின் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் நகை பறிக்க முயன்ற இளைஞரை வலை வீசி தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!