கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்தவர் சரத்குமார் மனைவி ஜெயந்தி (வயது 25). இவர் குளித்தலை காவிரி நகரில் உள்ள மெடிக்கல் ஒன்றில் கடந்த மூன்று மாதமாக வேலை பார்த்து வருகின்றார்.
இந்த நிலையில் வரகூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகின்றார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகின்றார். இவர் கடந்த இரண்டு மாதங்களாக

ஜெயந்தியை பின் தொடர்ந்து தகாத முறையில் செய்கை செய்து பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 7 மணியளவில் வேலையை முடித்துவிட்டு தனது கணவரின் சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட தயாரான போது அங்குள்ள மெக்கானிக் கடையின் வெளியே நின்று கொண்டு ஃப்ளையிங் கிஸ் செய்து அநாகரியமாக நடந்தது குறித்து கேட்டபோது தங்களை அடித்ததாகவும் இதனால் ஜெயந்தியின் உறவினர்கள் ரமேஷை சரமாரியாக தாக்கி எங்களை காப்பாற்றியதாகவும், .
ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளித்தலை காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் செய்துள்ளார்.
முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட ரமேஷ் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குளித்தலை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
