ராமநாதபுரம் மாவட்டம் சின்னமாயாகுளத்தில் கோபி, ரியாசுதீன் ஆகியோர் மூக்கு மற்றும் கண் பகுதியில் ரத்தம் வெளியேறிய நிலையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த ஏர்வாடி போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
