வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2025-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த வழித்தடத்தை திறக்க திமுக ஆட்சியில் முயற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ரயில்வே வாரிய ஒப்புதல் தாமதம் மற்றும் தேர்தல் அறிவிப்பு காரணமாக தங்கள் ஆட்சியில் சேவையை தொடங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மெட்ரோ எனும் குழந்தை அடுத்த அடியை எடுத்து வைப்பதை தாய்மை உணர்வுடன் பெருமிதமாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ திமுகவின் சாதனை”-மு.க.ஸ்டாலின்
