Skip to content
Home » லியோ காட்சிக்கு மத்தியில் காதலியை திருமணம் செய்த விஜய் ரசிகர்… தியேட்டரில் உற்சாகம்

லியோ காட்சிக்கு மத்தியில் காதலியை திருமணம் செய்த விஜய் ரசிகர்… தியேட்டரில் உற்சாகம்

  • by Senthil

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று  காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும்  திரையிடப்பட்டது.  அதிகாலை 4 மணிக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் வெளியானது.   சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில்  லியோ டைரக்டர்  லோகேஷ் கனகராஜ்,  இசை அமைப்பாளர்  அனிருத்,  நடிகைகள் கீர்த்தி சுரேஷ்,  ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் பார்த்தனர்.

புதுக்கோட்டையில் இன்று காலை  முதல்காட்சியை பார்க்க  காதலி சங்கீதாவுடன் வந்த விஜய் ரசிகர்   ெவங்கடேஷ் படம் நடந்து கொண்டிருந்தபோது தியேட்டரில் தனது காதலி  சங்கீதாவுக்கு மோதிரம், மாலை  மாற்றி திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

கிறிஸ்தவ முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டதாகவும், நாளை பெருமாள் கோவிலில் இந்து முறைப்படி திருமணம்  நடைபெறும் என்றும்  மணமகன்  வெங்கேடஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!