Skip to content
Home » விஜயகாந்த் நினைவிடத்தில் கதறிய நடிகர் கார்த்தி….

விஜயகாந்த் நினைவிடத்தில் கதறிய நடிகர் கார்த்தி….

  • by Senthil

புத்தாண்டு கொண்ட்டாடங்களை முடித்து கொண்டு நேற்று நாடு திரும்பிய நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று காலை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, ‘’கேப்டன் அவர்கள் மறைந்து விட்டார் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரோட இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியவில்லை என்பது என் வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும்.

கேப்டனுடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது இல்லை. ஆனால், சின்னப் பிள்ளையாக இருக்கும் போது நடிகர் சங்கத்தில் உணவு வழங்கப்பட்டு கொண்டிருக்கும், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று கூறுவார்கள்.

அவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் சங்கத்தில் ஜெயித்த பிறகு கேப்டனைச் சந்தித்து வாழ்த்து பெற்ற போது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்த்தினார். மிகப்பெரிய சவால்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம்.

ஒரு தலைவன் என்றால் முன்னாடி நின்று வழிநடத்த வேண்டும். இறங்கி வேலை செய்ய வேண்டும் என அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டோம். எல்லா பிரச்சினைகளுக்கும் முன்னாடி நின்று வேலை செய்திருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. மிகப்பெரிய ஆளுமை நம்முடன் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம். அவர் எப்போதும் எங்கள் மனதில் இருந்து கொண்டேயிருப்பார்.

வரும் 19-ம் தேதி நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் சாருக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். நடிகர் சங்கம் செய்ய வேண்டிய விஷயங்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து அன்றைய தினம் அறிவிப்போம்.

விஜயகாந்த் எல்லோருக்கும் அன்பு நிறைய கொடுத்து இருக்கிறார். அவரோட குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!