Skip to content
Home » விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சோஷியல் அண்ட் எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். முன்னதாக சங்கப் பொருளாளர் உஷாராணி வரவேற்றார், துணைத் தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். சங்கச் செயலர் கண்ணதாசன் 2022-2023 நிதியாண்டின் வரவு -செலவு கணக்கு மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார். வழக்கறிஞர் கண்ணன் சட்டம் குறித்துப் பேசினார். இதில் அரசு பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்குவது, மகளிர் குழு பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சி மற்றும் நிர்வாக மேலாண்மை பயிற்சி வழங்குவது, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேறின. சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!