தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் கமல், ரஜினி, அஜீத், விஜய், சரத்குமார், பிரபு, தனுஷ் நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் , மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்கள், முதல் வாக்காளர்கள் என அனைத்து தரப்பினரும் வாக்களித்தனர்.
2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும். அதன்படி காலை 11 மணி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 24.37% வாக்குப்பதிவு ஆகி உள்ளது.
முன்னிலையில் உள்ள தொகுதிகளின் நிலவரம் இங்கே (சதவீதத்தில்)கொடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி 26.58, திண்டுக்கல்26.34, நாமக்கல் 26.07, கரூர் 26.07, சேலம் 25.97, விழுப்புரம் 25.69, தர்மபுரி 25.66, பெரம்பலூர் 25.62, ஆரணி 25.53, திருப்பூர் 25.47, விருதுநகர் 25.39, ஈரோடு 25.37, சிதம்பரம் 25.35, பொள்ளாச்சி25.02, தேனி24.99, தஞ்சை 24.96, திருவள்ளூர் 24.93, திருவண்ணாமலை 24.92, நாகை 24.92, கிருஷ்ணகிரி 24.82, மயிலாடுதுறை 24.76, அரக்கோணம் 24.71, திருச்சி 24.7, கன்னியாகுரி 24.68, வேலூர்24.67, கடலூர் 24.66, காஞ்சிபுரம்24.65, கோவை24.54, தென்காசி24.51, சிவகங்கை 24.47, தூத்துக்குடி 24.16, நீலகிரி 24, ராமநாதபுரம்23.89, திருநெல்வேலி 23.78, திருப்பெரும்புதூர் 23.53,
மதுரை22.73, வடசென்னை 22.05, தென் சென்னை 21.97, மத்திய சென்னை 20.09.
அதிகாரிகள், கல்வியாளர்கள் நிறைந்த சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக இருப்பது வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.