Skip to content
Home » வாஷிங் மெஷினில் ரூ.1.30 கோடி பணம் கடத்தல்….

வாஷிங் மெஷினில் ரூ.1.30 கோடி பணம் கடத்தல்….

  • by Senthil

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ  சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 6 வாஷிங் மிஷின் புதியதாக சீல் பிரிக்காமல் காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் டிரைவரிடம் விசாரனை செய்ததில் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா கொண்டு செல்வதாக கூறினார். விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்கள் ஆட்டோவில் அவ்வளவு தூரம் கொண்டு செல்லப்படுமா? ஆட்டோவில்  ஒரு கடையில் இருந்து இன்னொரு கடைக்கு மட்டுமே கொண்டு செல்வார்கள் என்பதால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த ஒரு வாஷிங் மிஷினை இறக்கி சோதனை செய்தனர்.

இதில்  கரன்சி நோட்டு மூட்டைகளை வைத்து ஆட்டோவில் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த 6 வாஷிங் மிஷன்களை கீழே இறக்கி சோதனை செய்ததில்  ரூ.1.30 கோடி மதிப்புள்ள ரொக்கம் பணம், 30 புதிய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு எலக்டானிக்ஸ் ஷோரூமிற்கு சொந்தமானது என தெரிய வந்தது. அதன் பிறகு போலீசார் அந்த கடை உரிமையாளரிடம் விசாரித்ததில் தசரா விற்பனையில் கிடைத்த பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய எடுத்து செல்வதாக எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் விளக்கம் அளித்தார். ஆனால், எதற்காக இவ்வளவு பெரிய தொகையை கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்காததால் பணத்தை பறிமுதல் செய்து சிஆர்பிசி பிரிவு 41 மற்றும் 102ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!