சேலம் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2,121 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 1,195 கனஅடியாக சரிந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தொடர்ச்சியாக அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 70.62 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 33.23 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
