Skip to content
Home » இனிப்பு தந்த ராகுலுக்கு இனிப்பான வெற்றி தருவோம்…. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

இனிப்பு தந்த ராகுலுக்கு இனிப்பான வெற்றி தருவோம்…. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

  • by Senthil

இந்தியா கூட்டணி சார்பில் நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பரப்புரையாற்றினார். முன்னதாக ராகுல்காந்தி, தானே கடைக்கு சென்று இனிப்பு வாங்கி முதல்-அமைச்சரிடம் வழங்கினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனக்கு இனிப்பு வழங்கிய வீடியோவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.. என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இனிப்பான  வெற்றி்யை தருவோம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!