உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா மைதானத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதோடு, முதல் பேட்டிங் செய்யவில்லை என்றாலே அரையிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலை இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அணியே நினைத்தாலும் வெற்றிபெற முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை இங்கிலாந்து அணி இங்கிலாந்து அணி 200 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தால், பாகிஸ்தான் அணி 4.3 ஓவர்களிலும், இங்கிலாந்து 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால், பாகிஸ்தான் அணி 6.1 ஓவர்களிலும் சேஸ் செய்ய வேண்டும். முதல் பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணி 300 ரன் அடிக்கும் என்கிற நிலை உள்ளதால் 37 பந்துகளில் 50 சிக்ஸ் அடித்து 300 ரன்கள் எடுக்க வேண்டும். நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியாறியுள்ளது…