Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், குமாரபாளையம், செல்வபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (38) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மணிகண்டன் அவரது நண்பர் மதிவாணன் என்பவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது இருவரும் சேர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதைக் கண்ட கடல் பாதுகாப்பு போலீசார், கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை மீட்டு கோவில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!